அவரவருக்குப் பிடித்தது
மகான்களுக்கு தர்மோபதேசம்
சபாக்காரர்களுக்குக் கீதோபதேசம்
அவருக்கு சித்தாந்தம்
இவருக்கு வேதாந்தம்
பெரியவருக்கு ஞானோபதேசம்
சிறியவருக்கு பிரம்மோபதேசம்
அவளுக்குப் பட்டுப்புடைவை
இவளுக்கு இரட்டைவடச் சங்கிலி
மாடர்ன் கட்டிங் மாடர்ன் டிஸைன்
சில பெண்மணிகளுக்குப்
பெண் விடுதலை
சில மகளிருக்கு கூடிவிட்ட
எடையிலிருந்து விடுதலை நல்கும் ஜிம்
எனக்குப் பிடித்தது?
எனக்குப் பிடித்தது
எப்போதுமே அக்கார வடிசலில்
அதிக நெய்
மிளகுப் பொங்கலில்
பட்டரின் கைமணம்
பிரசாதம் வாங்கிய
கையோடு திரும்பிப் பார்த்துக்
கண்ணோட்டமிடுவது
மேற்குறித்த எல்லோருமே
டயட் கட்டுப்பாட்டையும்
சற்றே ஒத்தி வைத்து
வரிசையில் நிற்கக் காண்பது.
எல்லோரும் ஓர் நிறை
எல்லோரும் பெருமாள் கோயில்
பிரசாதத்தின் பக்தர்கள்.
தாமின்புறுவது உலகின்புறக்
கண்டுக் காமுறுவது
கற்றறிந்தார் வழக்கம்
மகான்களுக்கு தர்மோபதேசம்
சபாக்காரர்களுக்குக் கீதோபதேசம்
அவருக்கு சித்தாந்தம்
இவருக்கு வேதாந்தம்
பெரியவருக்கு ஞானோபதேசம்
சிறியவருக்கு பிரம்மோபதேசம்
அவளுக்குப் பட்டுப்புடைவை
இவளுக்கு இரட்டைவடச் சங்கிலி
மாடர்ன் கட்டிங் மாடர்ன் டிஸைன்
சில பெண்மணிகளுக்குப்
பெண் விடுதலை
சில மகளிருக்கு கூடிவிட்ட
எடையிலிருந்து விடுதலை நல்கும் ஜிம்
எனக்குப் பிடித்தது?
எனக்குப் பிடித்தது
எப்போதுமே அக்கார வடிசலில்
அதிக நெய்
மிளகுப் பொங்கலில்
பட்டரின் கைமணம்
பிரசாதம் வாங்கிய
கையோடு திரும்பிப் பார்த்துக்
கண்ணோட்டமிடுவது
மேற்குறித்த எல்லோருமே
டயட் கட்டுப்பாட்டையும்
சற்றே ஒத்தி வைத்து
வரிசையில் நிற்கக் காண்பது.
எல்லோரும் ஓர் நிறை
எல்லோரும் பெருமாள் கோயில்
பிரசாதத்தின் பக்தர்கள்.
தாமின்புறுவது உலகின்புறக்
கண்டுக் காமுறுவது
கற்றறிந்தார் வழக்கம்