Friday, January 18, 2013

வெள்ளை எலிகள் .. ஒரு சிறுமி.. நான்

வெள்ளை எலிகள் .. ஒரு சிறுமி.. நான் 
'வெள்ளை எலிகளை
நீ பார்த்திருக்கிறாயா நேரில்?'
அந்தச் சிறுமிக்குக் குறுமுயல் முகம்.
'இல்லை' என்றேன்.
பாவம் என்றாள்.
யார் ?
வெள்ளை எலிகள்.
ஏன்?
அவை அறிவியல் சோதனைக்காக
வளர்த்து அறுக்கப்படுவதை
நான் பார்த்தேன்.
எங்கே?
டிவியில்.
நீ அறுக்க மாட்டாயா?
மாட்டேன்.
கறுப்பு எலிகள்?
மாட்டேன்.
எந்த நிற எலிகளையும்
நான் அறுக்க மாட்டேன்.
அறிவியல் சோதனைகளையே
நடத்த முடியாதே!
முடியாவிட்டால் தான் என்ன?
நான் பதில் சொல்ல
இயலாத கேள்வி அது.
ஒருநாளைக்கு எலிகளே கிடைக்காவிட்டால்?
என்னையும் உன்னையும் வைத்து அறுப்பார்கள்.
ஏன்?
நீயும் நானும் வெளுப்பு

No comments: