இதுவும் கடந்து போகும்,
----------------------------------------இதுவும் கடந்து போகும்,
எதுவும் கடந்து போகும்.
அழகி கிழவி ஆவாள்;
அழகு எனும் மூலதனம்
அழியக் கண்டு அஞ்சி
கிழவி அழகியாக முயற்சிப்பாள்.
மேக்கப் சாதனங்கள்
விலை கூடும்;
விற்பனை அதிகரிக்கும்,
அதிகரிக்க முடியாது
அழகை என்று உண்மை புரியும்
ஞானம் வரும்.
அதுவும் கடந்துபோகும்
எதுவும் கடந்துபோவது போல
-வையவன் .