Saturday, March 9, 2013

கடைசியில் மிஞ்சுவது லிங்கம்

கடைசியில் மிஞ்சுவது லிங்கம் 
கடைசியில் மிஞ்சுவது லிங்கம்
வெவேறு அளவிலே
வெவ்வேறு வடிவிலே
பொருத்தி வைத்துக்கொள்ள
விரிபுலம் காட்டி
ஜெயபேரிகை கொட்டிப்
போர்முழக்கம் செய்தாலும்
லிங்கம் லிங்கம் தான்
ஆவுடையார் ஆவுடையார் தான்.
மிஞ்சுவது லிங்கம்
எஞ்சுவது ஆவுடையார்.

உழுதவன் அழுகிறான்

உழுதவன் அழுகிறான்  
உழுதவன் அழுகிறான் 
உலகிற்கு நேரமில்லை,
கண்ணீர் துடைக்க,
தேறுதல் வார்த்தை சொல்ல.
மனிதர் வற்றவைத்த நீர்நிலை நோக்கி
இதயங்கள் வறண்ட இறுகு நிலை பார்த்து
சுற்றிச் சுற்றிச் சோர்ந்து போய்
நீரிழந்து,நெருப்புக் குண்டுகள்
விதைத்த நிலம் காட்டி ஓடுகிறது
'நானும் அழுகிறேன் மகனே
யார் அழுவதும் பொருளற்றுப் போன
பணப்பேய்ச்  சூழலில்
பிறந்ததால் அழுது
இறந்ததும் நிறுத்து!.
உன் அழுகையை விற்று
வியாபாரம் நடத்த
தந்திர  வணிகர் கூட்டம்
சுற்றி நின்று
பார்த்துக்கொண்டு இருக்கிறது வாய்ப்பு!
ஓநாய்களும் முதலைகளும்
அழுகைக் கலை நிபுணராகிவிட்டன
 உஷாராய் இரு !'