Tuesday, September 20, 2016

நாமக்கல்லில் வாயுமைந்தன்




நாமக்கல்லில் வாயுமைந்தன்

--------------------------------------------------
வான் காண உயர்ந்து நின்றான்
வாயுமைந்தன் நாமக்கல்லில்;
வழிகேட்டு வந்தவர்க்கு
வாக்கின் செல்வன்
கைகுவித்த செய்கையால்
சைகை காட்டி
ராம நாமம் காக்குமென்று
மௌன மொழி
ஆசிகூறி அருள்வழங்கி
தான் காணும் காட்சி எல்லாம்
காகுத்தன் மாட்சியன்றி
மற்றொன்றில்லை என
நான் நானென்று அகங்கரித்த
இலங்கை வேந்தன்
இன்று போய்  நாளை வரச்சொன்ன
மொழி கேட்டு நாணமுற்றுத்
திரும்பிச் சென்ற திக்கை
நினைவீரெனச் செருக்கறுத்துப்
பணியச் சொன்னான்;.
-வையவன்

எப்போதுமே ஜெயிப்பதும் எப்போதுமே தோற்பதும்

எப்போதுமே ஜெயிப்பதும் 
எப்போதுமே தோற்பதும் 
------------------------------------
வெற்றி தோல்விகளின் 
பற்றுவரவான பூமியில் 
எப்போதுமே ஜெயிப்பதும்
எப்போதுமே தோற்பதும்
எப்படி சாத்தியம்?
விதி வகுக்கும்
வெற்றிச்சுவை அறிய
தோல்வித் துயர்
தெரிய வேண்டுமே!
வில்லாதி வில்லர்களும்
படிக்க வேண்டியபாடம் அது.
-வையவன்