தாயொருத்தி இருக்கிறாளா ?
எப்படி இப்படி
ஓய்வின்றிச் சுழல்கின்றது பூமி?
கிரகக் கூட்டம்
அண்டவெளி, பேரண்டம்?
காற்றுக்கும் ஓய்வில்லை
ஈதர் அடுக்கு கடந்த
எண்ணிலாத தடைகளுக்கும்
விலக்கில்லை; எண்ணிப்பார்த்து
கருணையால் இரங்குவோர் யார்?
ஓயாமல் நடக்கும் அந்த
உற்பத்தி உற்பாதத்தில்
பிரபஞ்ச சக்தியின்
உறக்கம் கலையக்கூடாதெனத்
திட்டித் திட்டித் தட்டித் தட்டித்
தாலாட்டும் தாயொருத்தி
இருக்கிறாளா பின்னணியில்?
எப்படி இப்படி
ஓய்வின்றிச் சுழல்கின்றது பூமி?
கிரகக் கூட்டம்
அண்டவெளி, பேரண்டம்?
காற்றுக்கும் ஓய்வில்லை
ஈதர் அடுக்கு கடந்த
எண்ணிலாத தடைகளுக்கும்
விலக்கில்லை; எண்ணிப்பார்த்து
கருணையால் இரங்குவோர் யார்?
ஓயாமல் நடக்கும் அந்த
உற்பத்தி உற்பாதத்தில்
பிரபஞ்ச சக்தியின்
உறக்கம் கலையக்கூடாதெனத்
திட்டித் திட்டித் தட்டித் தட்டித்
தாலாட்டும் தாயொருத்தி
இருக்கிறாளா பின்னணியில்?