Sunday, January 20, 2013

அடியாளா? அடிமாடா?

அடியாளா? அடிமாடா?
பெட்டி பூர்ஷுவாக்கள் நடத்திய
வெல்லமண்டிக் கனவான்களுக்கு
பெட்டிக்கடை வைத்து
பீடி சிகரெட் விற்ற
மாஜி விவசாயியின்
மகன் நான்
அவரிடமிருந்து
மாசேதுங்கின் மன எரிமலைக்
குழம்பு சுமந்து  மறுகிமறுகிக்
கனன்றுக் கைமாறிய அனல்
இன்னும் என்னுள்
உறங்கிக் கொண்டுதானிருக்கிறது
தண்டகாரண்யத்திலும் வடதெலுங்கானாவிலும்
குண்டு முழக்கம் கேட்கும்போதெல்லாம்
உறக்கம் கலைந்து ஒரு ஏளனச் சிரிப்பொலி
எக்காள முழக்கமாகக் கேட்கிறது என்னுள்
யார் நீ? எது உன் புதிய வேஷம்?
தேர்தலுக்குத் தேர்தல்
அரசியல் எதிரிகள்
கூடாரம் விட்டு கூடாரம் மாறிக்
கைகோர்த்து மக்கள் மந்தையை
அடித்துப் போட்டு  பங்கு
வந்ததும் பிரிந்துக்
குற்றம் சாட்டக்  கூடும் கூட்டத்தின்
அடியாளா? அடிமாடா?
மாற்றமுடியாத சமூக அமைப்பின்
மாறமுடியாத கைதியாய்,
மகான்களும் மகாத்மாக்களும்
பூட்டியிருக்கிற விலங்குகளை
தூக்கிக் காட்டும் சித்தாந்தக் கோழையா?
கேள்விகளின் தீ சுட்டுப் பொசுக்கினாலும்
விளைவில்லை என்னிடம்;
கைமாறக்காத்திருக்கும்
அணையாத அனல் தவிர


No comments: