Wednesday, May 22, 2013

ஓடியிருக்கிறது வண்டி

ஓடியிருக்கிறது வண்டி

உருண்ட சக்கரம்
போன திக்கில்
திரும்பித் திரும்பிப்
பார்த்து என்ன
சாதித்தோம்?
காற்றும் மழையும்
கழுவிக் கலைத்த
சுவடுகளைத் தவிர.

மீண்டும் மீண்டும்
பதிகின்றன  அதே சுவடுகள்
வெவ்வேறு வடிவில்
திரும்பித் திரும்பிப்
பார்க்கிறோம் பொழுதுபோகாமல்  .  
 

இரக்கத்தின் எதிர்காலம்

இரக்கத்தின் எதிர்காலம்

நிகழ்காலம்,
இறந்தகாலம்,
எல்லாம் சேர்ந்து
புதையுண்டு போன
அதே கல்லறைகளில்.
புத்தனில் தொடங்கி
யுத்த சரித்திரங்கள்
அதே கல்லறைகளில்

இருக்கலாம்

இருக்கலாம்
மறக்க முடியாத
நினைவுகளுக்கு ஓர் மாற்று
திறக்க முடியாத
கதவுகளுக்கோர் சாவி
கைவசம் ஆவதில் 
கால தாமதம்
பொறுக்கப்பழகினால்
கிடைக்கலாம் ஏதும்