அந்த சுதந்திரம் .
பெருமூச்சு விடாத
அந்த சுதந்திரம்
விருது, பரிசு
விழா, பாராட்டு,
பட்டம், பதவி என ...
பொய்களின் சிறைக்கூடத்தில்
செய்த செயலுக்கு மாட்டும்
கைவிலங்குகளில்
சமுதாய ஒப்பந்தக்கல்லறைகளில்
சிக்கிக்கொள்ளாமல்
பாடிக்கொண்டே பறக்கிறது
அந்த வானம்பாடி
சிக்கிக்கொண்டவை
மீண்டும் விடுகின்றன
ஒரு பெருமூச்சு
அந்த சுதந்திரத்தை எண்ணி.