தலையெழுத்து
ஜனனீ ஜன்ம சௌக்யானாம்
பதவீ பூர்வ புண்யானாம்
வர்த்தனீ குல சம்பதாம்
மணிநாதமாய் வருகிறது
புரோகிதர் நாவில் வாக்கு
உடல் வடிவம் பெற்று
உயிர் மடியில் குலுங்கிச் சிரிப்பதால்
பூரிக்கிறது அவர் மனம்.
தொடங்கியிருக்கிறது
உயிரின் யாத்திரை ஒரு பெயரோடு
தலையெழுத்து என்று தடம்
அமைத்திருக்கிற தண்டவாளங்களில்
இனி ஓடவேண்டும் எல்லா அனுபவங்களும்
இந்திய ஞானம் பேரிட்டிருக்கிற போக்குவழியில் .
மாற்றிக் காட்டுவேன் என்று தீரமாய் முனைந்தாலும்
அதுவும் தலையெழுத்துள் அடக்கம்
தண்டவாளம் அது வரை
போடப்பட்டிருக்கிறது என்கிறது வேதாந்தம்
அப்போது மீதி?
கார்ல் மார்க்ஸ்?
பொருள்முதல்வாதம்?
உலகத் தொழிலாளர் ஒற்றுமை?
அது அவரவர் தலையெழுத்து.
ஜனனீ ஜன்ம சௌக்யானாம்
பதவீ பூர்வ புண்யானாம்
வர்த்தனீ குல சம்பதாம்
மணிநாதமாய் வருகிறது
புரோகிதர் நாவில் வாக்கு
உடல் வடிவம் பெற்று
உயிர் மடியில் குலுங்கிச் சிரிப்பதால்
பூரிக்கிறது அவர் மனம்.
தொடங்கியிருக்கிறது
உயிரின் யாத்திரை ஒரு பெயரோடு
தலையெழுத்து என்று தடம்
அமைத்திருக்கிற தண்டவாளங்களில்
இனி ஓடவேண்டும் எல்லா அனுபவங்களும்
இந்திய ஞானம் பேரிட்டிருக்கிற போக்குவழியில் .
மாற்றிக் காட்டுவேன் என்று தீரமாய் முனைந்தாலும்
அதுவும் தலையெழுத்துள் அடக்கம்
தண்டவாளம் அது வரை
போடப்பட்டிருக்கிறது என்கிறது வேதாந்தம்
அப்போது மீதி?
கார்ல் மார்க்ஸ்?
பொருள்முதல்வாதம்?
உலகத் தொழிலாளர் ஒற்றுமை?
அது அவரவர் தலையெழுத்து.
No comments:
Post a Comment