Friday, January 18, 2013

விரல்களின் விதி

விரல்களின் விதி
 1
கதவருகில் சுவர் மீது
காலிங் பெல் ஸ்விட்ச்
இருந்துவிட்டால் 
அதை அழுத்துவதற்கு
உலகின் எல்லா விரல்களுக்கும்
உரிமை உண்டு
எவர் அழுத்தினாலும்
நாம் கதவைத் திறந்து
பொறுமையாய்ப் பதில்
சொல்லவேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம்
எவ்வளவு சலிப்பிருந்தாலும்
 2
எல்லா விரல்களுமே
மிக நல்ல வீணை தடவை
ஈசனெந்தை இணையடி நீழலில்
இளைப்பாற விரும்பும் என்பது
நான் அவ்வப்போது 
போடும் தப்புக்கணக்கு
உலகெங்கும் எல்லா விரல்களுமே
கரன்சி நோட்டுக்களைத்
தடவித்தடவி எண்ணுவதையே
மிகவும் காதலிக்கின்றன
காலிங் பெல்லை
அழுத்துவதைக் காட்டிலும்  அதிகமாய்
அப்போது காதலி?
அட போய்யா நீயும்
உன் காதலும் எனத் தூக்கிஎறிந்துவிட்டு
அவளும் அதையே விரும்புவாள்

No comments: