காதலென்பதோர் மாருதம்
காதலென்பதோர் மாருதம் வீசவும்
காதலென்பதோர் மாருதம் வீசவும்
மோகமென்பதோர் மணியோசை நடுங்க
நடப்பது காணச் சாளரம் திறந்தாள்
திலகமிட்டு மையெழுதியத் திருமுகவல்லி.
தொழுது நின்றான் கைகூப்பி
எழுநிலை மாடத்தின் கீழ்ப் புது மணவாளன்
உதிக்கும் திருநாளின் திரைவிலக்கி,
உயரும் கதிரவன் எதிரே.
தொழுகை எனக்கே என
புருவம் நெரித்தாள் முறுவல் மறைத்து.
பொன்கிரணம் பூசிய மஞ்சம் காட்டிக்
கண்ணிமைகள் சிமிட்டினான் காதலன்
காதலென்பதோர் மாருதம் வீசவும்
காதலென்பதோர் மாருதம் வீசவும்
மோகமென்பதோர் மணியோசை நடுங்க
நடப்பது காணச் சாளரம் திறந்தாள்
திலகமிட்டு மையெழுதியத் திருமுகவல்லி.
தொழுது நின்றான் கைகூப்பி
எழுநிலை மாடத்தின் கீழ்ப் புது மணவாளன்
உதிக்கும் திருநாளின் திரைவிலக்கி,
உயரும் கதிரவன் எதிரே.
தொழுகை எனக்கே என
புருவம் நெரித்தாள் முறுவல் மறைத்து.
பொன்கிரணம் பூசிய மஞ்சம் காட்டிக்
கண்ணிமைகள் சிமிட்டினான் காதலன்
No comments:
Post a Comment