Friday, January 18, 2013

சக்கர வளையம்

சக்கர வளையம்
வந்து  விழுந்தது
வெள்ளக்குட்டையில்
சென்று நுழைந்தது
சௌகார்பேட்டையில்
நின்று  நிமிர்ந்தது
திருப்பத்தூரில்
சுயம் தேடித்
திரியும் யாத்திரை
எங்கோ தொடங்கி
எங்கெங்கோ திரிந்து
தேடிய  திசைகள்
சுற்றிச் சுழலும்
சக்கர வளையமே
ஒரே அச்சு
ஒரே இருசு
ஒரே வட்டம்.

No comments: