Friday, January 18, 2013

ஹர ஹர நமப் பார்வதி பதயே

ஹர ஹர நமப் பார்வதி பதயே
தோண்ட ஆரம்பித்துவிட்டார்கள்
கல்லறைகளை, புதை குழிகளை,
அங்கம் அங்கமாகப் பிய்த்துப்பகுத்து 
பெரிய  அக்கப்போர்
இன்னினார் சாமுத்ரிகா லட்சணம்
இன்னின்ன விதம்
இன்னார் தமிழுக்கு இன்னின்ன அபராதம்
இயற்றினார், இவாள் பெரிய சீமான்,
அவாள் அளவுக்கு இல்லை என்றாலும்!
இப்படிப் போகிறது இலக்கிய விமர்சனம்
அன்று க.நா.சு. சொன்ன
'பற்றி இலக்கிய' பஜனை கோஷ்டி
தொடர்கிறது வேறு புள்ளிகள் பற்றி.
பஜனை தமிழர் பாரம்பரியச் சொத்து
தொடரவேண்டாமா தலைமுறை?.
ஹர ஹர நமப் பார்வதி பதயே



No comments: