ஒலியின் உதயம்
தொடர்ந்து
ஓசை சிலும்பி உயர்ந்து
எழுந்து சிறகடித்தது
காற்று அதைப் பனைமரக்காடுகளில்
கொண்டு சென்றபின்
ஓலையில் பதிந்து
எழுத்தின் மேனி
பதிந்தது உருவாய்
எழுத்தும் ஓசையும்
இணைந்து நடனமாடின
நாவெல்லாம்
எழுத்துக்கு ஏது
ஓசை எனக்கேட்டவர்
கண் விழித்தனர்.
No comments:
Post a Comment