Thursday, January 17, 2013

எதை விட்டுவிட்டுப்போகிறோம் ?

எதை  விட்டுவிட்டுப்போகிறோம் ?
எதையாவது  விட்டுவிட்டோ மா என்று
வீட்டைக் காலி செய் யும் முன்
ஒரு சாமான் பாக்கி விடாமல்
லாரியில் ஏற்றியானபின்னும்  மீண்டும்
மீண்டுமென அறை அறையாகத்
திரும்பி வந்து தேடினால்
வெறிச்சோடிய வீடு பேசுகிறது
ஆயிரம் கதைகள் ..ஆயிரம் மௌனமொழிகள்
ஆயினும் விடைபெறத்தான் 
வேண்டிவருகிறது
எல்லாவற்றையும் அங்கேயே  விட்டுவிட்டு.

No comments: