Thursday, January 17, 2013

ஊசலாட்டம்

ஊசலாட்டம்
அச்ச த்தை அறுத்தெறிந்தவன்
கயிற்றின் மீது நடக்கின்றான்.
ஒரு கை விட்டு மறு கை
வளையம் தாவி வளையம்
பற்றி அந்தரத்தில் அவன்
தொங்கியாடும் ஊச லாட்டம்.
முயற்சி என்ற முத்திரை குத்தி
பயிற்சி என்று பெயர் வாங்கி
பக்குவம் கைவசமாகிறது.
அதுவாஇதுவா
இடமா வலமா
நாடா வீடா
நானா நாமா
அச்சம் என்பது
ஆறாத அவாவின்
மிச்சம் மீதி
அச்சத்தை அறுத்தெறி
 ஊசலாட்டம்
அறுந்தேபோகும் வாழ்ந்து காட்டினான்
சித்தார்த்தன்
வாக்கில் காட்டினார்
மௌனி மாணவர்
தாயுமானவர்.

No comments: