உலகெங்கிலும் உள்ளஅழகிகள்
உலகெங்கிலும் உள்ள ஒவ்வோர்
அழகி எதிர்ப்படும்போதெல்லாம்
நான் அவளைக் காதலிக்கத் தொடங்கிவிடுகிறேன்
மன்னியுங்கள் அல்லது மன்னிக்காதீர்கள்
இது என் பலவீனம் .
இல்லை இது என் இயல்பு.
ஒவ்வொருத்தியும் ஒரு சுற்று
என் கவிதைச் சக்கரத்தைச்
சுற்றி விடுகிறாள்.
மறந்தே போவதில்லை
நான் அப்படிக் காதலித்துக் கொண்டே
போவதை அறியாத
எல்லாவற்றையும் மன்னிக்கிற
எதையும் பொருட்படுத்தாத
ஒரு மனைவி எனக்கிருப்பதை!
பகவான் பார்த்துக்கொள்வார்
என்ற மகாவாக்கியம் அமுலில்
இருப்பது போல என் ஸ்டீயரிங்
அவள் கையில் அடக்கம் என்பதால்
நான் காதலித்துக்கொண்டே போகிறேன்
ஒவ்வொரு அழகியையும்.
உலகெங்கிலும் உள்ள ஒவ்வோர்
அழகி எதிர்ப்படும்போதெல்லாம்
நான் அவளைக் காதலிக்கத் தொடங்கிவிடுகிறேன்
மன்னியுங்கள் அல்லது மன்னிக்காதீர்கள்
இது என் பலவீனம் .
இல்லை இது என் இயல்பு.
ஒவ்வொருத்தியும் ஒரு சுற்று
என் கவிதைச் சக்கரத்தைச்
சுற்றி விடுகிறாள்.
மறந்தே போவதில்லை
நான் அப்படிக் காதலித்துக் கொண்டே
போவதை அறியாத
எல்லாவற்றையும் மன்னிக்கிற
எதையும் பொருட்படுத்தாத
ஒரு மனைவி எனக்கிருப்பதை!
பகவான் பார்த்துக்கொள்வார்
என்ற மகாவாக்கியம் அமுலில்
இருப்பது போல என் ஸ்டீயரிங்
அவள் கையில் அடக்கம் என்பதால்
நான் காதலித்துக்கொண்டே போகிறேன்
ஒவ்வொரு அழகியையும்.
No comments:
Post a Comment