Sunday, March 10, 2013

கண்டு முடித்துவிடு காணவிரும்பும் கனவுகளை


கண்டு முடித்துவிடு காணவிரும்பும் கனவுகளை 

நேற்றை நோக்கிப்
பாய்ந்தோடுகிறது இன்று
நொடியையும் நிமிடத்தையும்
உதறி உதறி எறிந்தபடி
விக்கிரமாதித்தியனை
விரட்டிக்கொண்டு
சாலிவாஹனன் சவாரி
வருவது போல்
நாளை துரத்தி வருகிறது பின்னால்
காலக்குதிரையின்
காலடிக் குளம்போசை
கொண்டுவரும் செய்தியோடு .
இருப்பதற்குள் மீண்டும்
மறுகணம் ஒன்று உதிப்பதற்குள்
கண்டு முடித்துவிடு
காணவிரும்பும் கனவுகளை
பிறகு மறந்துபோகும்
வருவது எது?
போவது எது?
இருப்பதும் பிறப்பதும்
இறப்பதும் யார் யார்?

No comments: