வழிபாடு இல்லாத வாழ்க்கை எது?
வழிபாடு இல்லாத வாழ்க்கை இல்லை;
கடவுளோ, கருத்தோ ,கோட்பாடோ,
எல்லா மடமைக்கும் எதிர்நிலை என்று
போர்க்குரல் எழுப்பும் மடமையோ ;
பாசமோ, நேசமோ,காதலோ, காமமோ,
எல்லா மதிப்பீடும் கைகட்டி நிற்கும்
மஹா சன்னிதானமான மஞ்சள் உலோகமோ
பொழுது விடிந்து பொழுது போனால்
ஏதேனும் ஒன்றைப் பற்றிப் பிடித்து
வழிபடப் பிறந்த மனிதன்
பரிதாப ஜீவன் தான்
ஒரு நிம்மதி; பரிபக்குவம் வந்ததும்
விடுபடும் எல்லா வழிபாடும் !
வழிபாடு இல்லாத வாழ்க்கை இல்லை;
கடவுளோ, கருத்தோ ,கோட்பாடோ,
எல்லா மடமைக்கும் எதிர்நிலை என்று
போர்க்குரல் எழுப்பும் மடமையோ ;
பாசமோ, நேசமோ,காதலோ, காமமோ,
எல்லா மதிப்பீடும் கைகட்டி நிற்கும்
மஹா சன்னிதானமான மஞ்சள் உலோகமோ
பொழுது விடிந்து பொழுது போனால்
ஏதேனும் ஒன்றைப் பற்றிப் பிடித்து
வழிபடப் பிறந்த மனிதன்
பரிதாப ஜீவன் தான்
ஒரு நிம்மதி; பரிபக்குவம் வந்ததும்
விடுபடும் எல்லா வழிபாடும் !
No comments:
Post a Comment