Sunday, March 10, 2013

மிதிபட்டுப் பதிந்த காலடித்தடங்கள்

மிதிபட்டுப்  பதிந்த காலடித்தடங்கள் 
மிதிபட்டுப் பதிந்திருக்கும்
காலடித் தடங்களில்
எது அவளுடையது?
எது அவனுடையது?
கரைமணல் வெளியில்
குறிப்பேதும் இல்லை.
அலை பாய்ந்துவந்து
அழிக்கிற வரையில்
அதுவா இதுவாவெனக்
காதல் இதயம்
பதைபதைக்கிறது.
ஒவ்வொன்றும் ஒவ்வொன்றென
மதி மயங்குகையில்
அத்தனையும் ஒருமித்து
ஆதிபாதம் அத்தன் பாதமாகி
இது உன்னுடையது
அது என்னுடையதென
அவளும் அவனும்
ஒன்றித்து நிற்கையில்
அலை ஆயத்தமாகிறது
அடுத்த அரங்கவேளைக்கு.

No comments: