நாடும் மாறும் நாளையும் மாறும்
உலகின் எங்கோ ஒரு மூலையில்
ஏதோ ஒரு நூலகத்திலோ
வாசிப்பு மேஜையிலோ
யாரோ ஒரு வாசகர்
வாசிக்கிறார் என் படைப்பை
இந்த வேளை இந்த நிமிடம்..
ஏதோ ஓர் ஏடு புரள்கிறது;
நாளை மாறும் நாடு என்ற
என் நம்பிக்கையின் உழவு
நடத்தி முடித்த என் பேனா
சொல் வயல் விளைவித்த
பக்கங்களைக் கண்டு
மூடியை மாட்டுகிறது தற்காலிகமாக.
நாடும் மாறும் நாளையும் மாறும்
நான் எதிர்பார்த்தபடி அல்லது எதிர்பாராதபடி
மாறவேண்டும் என்ற என் நம்பிக்கை
மட்டும் மாறவே மாறாது.
உலகின் எங்கோ ஒரு மூலையில்
ஏதோ ஒரு நூலகத்திலோ
வாசிப்பு மேஜையிலோ
யாரோ ஒரு வாசகர்
வாசிக்கிறார் என் படைப்பை
இந்த வேளை இந்த நிமிடம்..
ஏதோ ஓர் ஏடு புரள்கிறது;
நாளை மாறும் நாடு என்ற
என் நம்பிக்கையின் உழவு
நடத்தி முடித்த என் பேனா
சொல் வயல் விளைவித்த
பக்கங்களைக் கண்டு
மூடியை மாட்டுகிறது தற்காலிகமாக.
நாடும் மாறும் நாளையும் மாறும்
நான் எதிர்பார்த்தபடி அல்லது எதிர்பாராதபடி
மாறவேண்டும் என்ற என் நம்பிக்கை
மட்டும் மாறவே மாறாது.
No comments:
Post a Comment