Sunday, January 27, 2013

இயேசுவும் மார்க்ஸும்

இயேசுவும் மார்க்ஸும் 
எதிரிகளல்ல இயேசுவும் மார்க்ஸும்.
ஒரே இனம்
யூதர்கள்.
மனித மனப்பான்மையில்
மாறுதல் விரும்பிகள்.
ஒரே குறிக்கோள்
புதிய சாம்ராஜ்யம் .
ஒரே திட்டச் செயல்முறை
சீடர் கூட்டம் கூட்டி
ஸ்தம்பிக்கச் செய்வது பூமியை .
முன்னவர் பின்னவர் காலத்திலோ
பின்னவர் முன்னவர் காலத்திலோ
வாழ்ந்து
சந்தித்திருந்தால்
மாறியிருப்பார்கள் அவரவர் மதத்திற்கு
மறுதளித்திருப்பார்கள் ஒருவரையொருவர் விரைவில்
முதலில் என்னைச் சந்தித்தவர் இயேசு தான்
பிறகே மார்க்ஸ்.
 நான் மார்க்ஸை மறுதளிக்கவில்லை
அசைக்க முடியாத இயேசுவின் அடிவேரை
வெட்டப்போன மார்க்ஸை
விலக்கி ஒதுக்கி விட்டது ரஷ்யா.
 நான்  மறுதளிக்கவில்லை  மார்க்ஸை
ஆயுதம் சுமந்தபடியே
ஆயுசு முழுவ்தும் திரியமுடியாது.
உலக சமாதானமும்
சமாதான உலகமும் சாத்தியம் தான்
மறுத்தோ வெறுத்தோ அல்ல.
இயேசுவைப் போலவே மார்க்ஸும்
மறுதளிக்க முடியாதவரானது
அதையே நிரூபிக்கிறது.
ம றுதளிக்கவில்லை  மார்க்ஸை நான்
கோணம் வெவ்வேறாய் இருந்தாலும்
அடிப்படை மனித நேசமே.
  

No comments: