தொடங்கி இருக்கிறது அபினி யுத்தம்
இப்போது தான் தொடக்கம்
திக்கெல்லாம் பற்றித்திக்குமுக்காடி
திரைகள் முன்னால் குந்திப்
பிஞ்சு இளசுமுத்தல் என்று
பேதாபேதமின்றி
சேனல் மாற்றிச் சேனல் மாற்றி
மனக்குகையில் தொலைந்துவிட்ட
நிழலாட்டம்
அதை நாடி மதிமயங்கிக் கிடக்க
உழைப்பிழந்த உடம்புகளில்
குடியேற நேரம் தேடும்
நோய்நொடிகள் மறைந்திருக்க
டைம்பாஸ் டைம்பாஸ் என்று
காலம் போகிறது
கவனம் மறந்துவிட.
சீனாவை ஆண்ட அபினி
மாறுவேஷத்தில் வந்திருக்கிறது
சினிமா சின்னத்திரையென்று
சிலகாலம்.சிலநேரம்
மாட்டிக் கொள்ள முடிந்தவனுக்கு
கழற்றிக்கொள்ளவும் முடியும்
முடிவும் தொடக்கமும்
என்றென்றும் அவன் கைவசம்.
எனவே தான் அவன் மனிதன்
இப்போது தான் தொடக்கம்
திக்கெல்லாம் பற்றித்திக்குமுக்காடி
திரைகள் முன்னால் குந்திப்
பிஞ்சு இளசுமுத்தல் என்று
பேதாபேதமின்றி
சேனல் மாற்றிச் சேனல் மாற்றி
மனக்குகையில் தொலைந்துவிட்ட
நிழலாட்டம்
அதை நாடி மதிமயங்கிக் கிடக்க
உழைப்பிழந்த உடம்புகளில்
குடியேற நேரம் தேடும்
நோய்நொடிகள் மறைந்திருக்க
டைம்பாஸ் டைம்பாஸ் என்று
காலம் போகிறது
கவனம் மறந்துவிட.
சீனாவை ஆண்ட அபினி
மாறுவேஷத்தில் வந்திருக்கிறது
சினிமா சின்னத்திரையென்று
சிலகாலம்.சிலநேரம்
மாட்டிக் கொள்ள முடிந்தவனுக்கு
கழற்றிக்கொள்ளவும் முடியும்
முடிவும் தொடக்கமும்
என்றென்றும் அவன் கைவசம்.
எனவே தான் அவன் மனிதன்
No comments:
Post a Comment