Saturday, January 26, 2013

கூழுக்கும் கஞ்சிக்கும்

கூழுக்கும் கஞ்சிக்கும் 
கூழுக்கும் கஞ்சிக்கும்
கவிதை விற்று
நெஞ்சு நலிந்தது
தமிழ்ப்படைப்பு
இல்லாத கடவுளை
இருப்பதாய்க்கணக்கெழுதி
எண்ணிக்கை வளர்த்து 
கண்மூக்கு ஆயுதம் வாகனம்
கொடுத்துக்  கையிலே
ஜால்ராவொடும் தாளத்தோடும்
பக்திக் கிறுக்கில்
கோட்டை விட்டது நாட்டை

மையலுக்கும் உதட்டுக்கும்
முலைகளுக்கும் முயக்கத்திற்கும்
பண்டமாற்றம் செய்யமுனைந்து
பித்துப் பிடித்துப் பைத்தியமாகி
பரிகாசமே மீதி.தற்போது
குண்டும் பீரங்கியும்
கொலைவாளும் தீவட்டியும்
கோருகின்றன கைமாற்றம்

நீதி சொல்லிச் சொல்லி
நைந்தே போயிற்று பழஞ்சுவடி 

கடவுளாவது, காதல் கிளிகளின்
கொஞ்சுமொழிக்  கவிதையாவது !

கஞ்சிக்கும் கூழுக்கும்
வழியற்றோர் மன உலையில்

எரிகிறது தீ அடுப்பு  

No comments: