கவனம் ஈர்க்கும் கற்பூர ஜோதி
மறதியின் மகாநதியில் வீசும்
எல்லா ஞாபக வலையி லும் சிக்கிவிடுவதில்லை
சகுந்தலை தொலைத்த மோதிரம்
விழுங்கிய மீன்
காதல் கைநழுவிவிடுகிறது
காதலியின் சோக ரகசியம் போல
சிங்கங்கள் காத்திருக்கின்றன
தந்தையில்லாது வளரும்
மைந்தரின் கைகவ்வ.
வரலாறு காத்திருக்கிறது
தேசத்தின் ஒரு பெயருக்காக
பேரவை காத்திருக்கிறது
துஷ்யந்தர்களின் மனச்சாட்சிக்கு
மீனவன் சான்று போல
நாம் காத்திருக்கிறோம்
நம்மைப் படைத்த கடவுளின்
கவனம் ஈர்க்கக் கரையும்
கற்பூரமாக
மறதியின் மகாநதியில் வீசும்
எல்லா ஞாபக வலையி லும் சிக்கிவிடுவதில்லை
சகுந்தலை தொலைத்த மோதிரம்
விழுங்கிய மீன்
காதல் கைநழுவிவிடுகிறது
காதலியின் சோக ரகசியம் போல
சிங்கங்கள் காத்திருக்கின்றன
தந்தையில்லாது வளரும்
மைந்தரின் கைகவ்வ.
வரலாறு காத்திருக்கிறது
தேசத்தின் ஒரு பெயருக்காக
பேரவை காத்திருக்கிறது
துஷ்யந்தர்களின் மனச்சாட்சிக்கு
மீனவன் சான்று போல
நாம் காத்திருக்கிறோம்
நம்மைப் படைத்த கடவுளின்
கவனம் ஈர்க்கக் கரையும்
கற்பூரமாக
No comments:
Post a Comment