Saturday, January 12, 2013

காப்பிரைட்

காப்பிரைட் 
கடவுளாவதோ கடவுளைக்
கண்டுபிடித்து அந்த டெக்னிக்கை
காப்பிரைட் செய்து 
கட்டணம் வசூல் செய்கிற 
கனவோ  சற்றே 
ஒத்திப்போட்டு உற்றுக்கவனியுங்கள் 
மஞ்சளைச் செய்தது போல 
கறிவேப்பிலையை கைமுதல் 
செய்தது போல 
புறப்பட்டுவிட்டது 
வெள்ளைக்காரக் குருமார் படை.
அசடுகள் போல் சுயப்பெருமை வேண்டாம். 
சிறுதொழிலை உலகமயமாக்கியது 
போதாமல் அழியாத்தொழிலான 
கடவுள் கண்டுபிடிக்கும் தொழில் 
அவர்கள் கைக்குப்போய்விட்டால்  
அப்புறம் நீங்கள் லாட்டரி அடிப்பீர்கள்;
எச்சரிக்கை! இப்போதே 
கடவுள் கண்டுபிடிக்கும் தொழிலைக் 
 காப்பிரைட் செய்வது நல்லது  
 

No comments: