Saturday, January 12, 2013

ஒரு டேபிள் ஸ்பூன் தனிமை

ஒரு டேபிள் ஸ்பூன் தனிமை
அது போதும்  என்னை நான் மீட்டுக்கொள்ள 
எல்லா பிம்பங்களையும்  
எண்ணை தேயத்துக்குளித்துத் 
தலைமுழுகிவிட 
சொன்னார் அந்த 
மிகமிகமிகப் பிரபலம்  
பரிதாபமாயிருந்தது .
ஏன் பிரபலமாக வேண்டும்?
ஏன் புலம்பவேண்டும்?
மாமனிதன் வேஷமா?
மாறுவேடப் போட்டியா?
மொட்டையடித்துப் பரதேசியாக 
சோற்றுக்கு அலைகிற 
சுகம் எப்படி இருக்கும்? 
அலுப்பின் ஆதங்கம் 
உருக்கவே அழைத்துச் 
சென்றேன் ஜவ்வாது 
மலைக்காட்டில் 
மூங்கில் வெட்டும் 
ஆதிவாசி குடிசைக்கு.
இலுப்பெண்ணை வாடை  
எருமைச்சாணம் மெழுகிய 
முற்றத்து மணம் 
திண்ணையில் காய்ந்த 
பன்றியிறைச்சித் துண்டம் 
இருளோடும் கூரைக்குள் 
தலை குனிந்துத தாழ்ந்து 
இறங்கும் குளிர்.
ஙொய் என்று இரையும் 
சிள்வண்டு மௌனம் 
எண்ணறியா தலைமுறையாக 
தனிமையே உறவாகச் 
சிரிக்கும் கண்ணும் பல்லும் 
ஒரே மணி நேரத்தில் 
தப்பித்துக் கிளம்பிவிட்டார் 
தனிமை வேண்டிய தவமணி 
சாகவேண்டியது தான்  
 இனி அவர் சொற்பொழிவைக் 
கேட்க இருப்போர்.
ஆதிவாசி அனுபவிக்கும் 
துன்பம் கேட்டுக் கேட்டுப் 
பொறுக்கமாட்டாமல் 
ஆழ்கடல் மீன் போல் 
ஆதிவாசியின் தனிமைச் சுகம் 
அவனே அறிவான்.















 

No comments: