யோகா
ஏதாவது ஒரு வகையில்
எப்படியோ ஒரு வழியில்
தவணை முறையிலோ
ஒரே பேமெண்டிலோ
கூட்டம் கூடியோ
அல்லது தனியாகயோ
எந்தக்கட்டணமாவது
செலுத்திவிட்டு நீங்கள்
யோகா கற்காவிட்டால்
நவீன மனிதரே இல்லை
அவுட் ஆப் டேட் .
பதஞ்சலி பட்ட பாட்டிற்கு
பிரயோசனமே இல்லை.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகி
அமெரிக்கா ஐரோப்பா முழுவதும்
குடிசைத்தொழிலாகவும்
கார்பொரேட் செக்டாராவாகவும்
வெட்டியாகவா நடக்கிறது விவகாரம்?
மகாமனித மந்தை ஒன்று
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
எந்த யோகாவுமின்றி
சரக்கு மாஸ்டர் அன்றாடம்
போடும் பஜ்ஜி போண்டா போலவே
அன்றாடத் தேவைக்காக
உயிர் வாழ்ந்து நீப்பது
பரிதாபமல்லவா?
நீங்களும் வல்லவராகி
நாலோடு நாராயணனாகி
நெஞ்சு நிமிர்த்தவேண்டாமா?
பாட்டாளி ,விவசாயி
தொழிலாளி, பஸ் டிரைவர் கண்டக்டர்
எந்த யோகாவுமின்றி
எப்படியோ ஜீவித்தால் உமக்கென்ன?
அது அவர்கள் தலையெழுத்து.
ஏதாவது ஒரு வகையில்
எப்படியோ ஒரு வழியில்
தவணை முறையிலோ
ஒரே பேமெண்டிலோ
கூட்டம் கூடியோ
அல்லது தனியாகயோ
எந்தக்கட்டணமாவது
செலுத்திவிட்டு நீங்கள்
யோகா கற்காவிட்டால்
நவீன மனிதரே இல்லை
அவுட் ஆப் டேட் .
பதஞ்சலி பட்ட பாட்டிற்கு
பிரயோசனமே இல்லை.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகி
அமெரிக்கா ஐரோப்பா முழுவதும்
குடிசைத்தொழிலாகவும்
கார்பொரேட் செக்டாராவாகவும்
வெட்டியாகவா நடக்கிறது விவகாரம்?
மகாமனித மந்தை ஒன்று
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
எந்த யோகாவுமின்றி
சரக்கு மாஸ்டர் அன்றாடம்
போடும் பஜ்ஜி போண்டா போலவே
அன்றாடத் தேவைக்காக
உயிர் வாழ்ந்து நீப்பது
பரிதாபமல்லவா?
நீங்களும் வல்லவராகி
நாலோடு நாராயணனாகி
நெஞ்சு நிமிர்த்தவேண்டாமா?
பாட்டாளி ,விவசாயி
தொழிலாளி, பஸ் டிரைவர் கண்டக்டர்
எந்த யோகாவுமின்றி
எப்படியோ ஜீவித்தால் உமக்கென்ன?
அது அவர்கள் தலையெழுத்து.
No comments:
Post a Comment