ஆதியென்றும் அந்தமென்றும்
இன்பமென்றும் துன்பமென்றும்
சுபமென்றும் அசுபமென்றும்
இரண்டிலொன்று மட்டுமேயென்று
இடைநடு என்பதொன்று
இல்லவே இல்லையென்று
மதிமயக்கம் கொண்டதால்
செம்மாந்து நின்றிருந்தேன்
ஒவ்வோர் அடி வைத்து
ஒவ்வோர் படி மிதிக்கும்போது
இடறுமபோது விளங்கிற்று
யாவுமே தெளிவாக
இடைநடுப் பதிவுகள் தான்
ஒருகால் உயர
மறுகால் கீழிருக்கும்
அடுத்தடுத்த கட்டங்கள் தான்.
இன்பமென்றும் துன்பமென்றும்
சுபமென்றும் அசுபமென்றும்
இரண்டிலொன்று மட்டுமேயென்று
இடைநடு என்பதொன்று
இல்லவே இல்லையென்று
மதிமயக்கம் கொண்டதால்
செம்மாந்து நின்றிருந்தேன்
ஒவ்வோர் அடி வைத்து
ஒவ்வோர் படி மிதிக்கும்போது
இடறுமபோது விளங்கிற்று
யாவுமே தெளிவாக
இடைநடுப் பதிவுகள் தான்
ஒருகால் உயர
மறுகால் கீழிருக்கும்
அடுத்தடுத்த கட்டங்கள் தான்.
No comments:
Post a Comment