Thursday, November 1, 2012

அது என்ன ஒரு நிலா?



நூறு நிலா வந்தாலும்
நீ வரும் வழிகளை
ரசப் பூச்சால் அலர மெழுகி
வெள்ளி வெளிச்சத்தால் கோலமிட்டு
நட்சத்திரக் குத்து விளக்குகளை
அடிக்கு அடிக்கு நிறுத்தி வைத்து
என் வீட்டிற்குக்  கைகாட்டி
வழி சொல்ல முடியவில்லை என்றால்
அது என்ன ஒரு நிலா?
அது போல் நூறு நிலா
வந்தாலும் நான் மதிக்க மாட்டேன்.
வையவன்

No comments: