Saturday, July 28, 2012

காதலின் ஸ்வரஸ்தானங்கள்

கண்ணீரின் படிக்கட்டுகள் 
இலையுதிர் காலத்தில்
முடியிழந்து முக்காடில்லாத
கிழட்டு விதவையாகி
வசந்தம் வந்ததும்
பருவக்குமரி போல்
குலுங்கிப்பகட்டும் காடுகள்
இதோ அருகில் அருகிலே தான்
காற்று உதிர்த்ததால் ஓலமிட்டு
ஓடிய இலைகளை எண்ணி
மழை சிந்திய கண்ணீர்த்துளிகளை
நினைத்து கிளைகள்
சலசலத்துச் சிரிக்கின்றன
கண்ணீரைப் படிக்கட்டாக்கி
கால் முளைத்து வந்த
இலைகள் கைதட்டுகின்றன.
ஏழையின் ஆயுதமும்
இறைவனின் சிரிப்பும்
கண்ணீரின் படிக்கட்டுகளில்
ஏற்றி ஏற்றி விட்டால் தான் 
விமோசனம் கிடைக்கிறது
காதலின் ஸ்வரஸ்தானங்கள் கூட
அங்கே மிதித்துத்தான்
எங்கோ செல்கின்றன
வையவன் 

No comments: