அம்மா எங்களைக் காணவருவாள்
அம்மா எங்களைக் காண வரும்போதேல்லாம்
நாங்கள் பர்ஸ்ட் லைன்
பீச்சுக்குப் போவோம்
அப்போது மெரீனா தான்
செகண்ட் லைன் பீச்
பால்வெள்ளை மணலை இழந்து
இப்போது சிதிலமாகிவிட்ட
சென்னைக் கடற்கரையில் நின்று
வங்காள விரிகுடாவை
அம்மா வெகுநேரம் வெறித்துப் பார்ப்பாள்
உடனிருப்போம் நாங்கள் வாய்பேசாது
அவள் மௌனத்திற்கு மரியாதை தந்தபடி
முக்காடிட்டு மேகம் தரும்
முலைப்பாலைக் குடிக்காமல்
முந்தானை ஒதுக்கி
எட்டிப் பார்க்கும்
சுட்டிக் குழந்தை போல
நிலா தெரிவதைக் கண்டு
பெருமூச்சின்றி அவள் சொல்வாள்
'உங்கள் அப்பா உயிரோடிருந்தால்
பேசித் தீர்க்க எத்தனையோ நினைவுகள் !
நேரமே போதாது '
பிறகு உடனே
மறைந்து விடுவாள்
கனவைக் கலைத்துவிட்டு.
அப்பா போன் கப்பலை
விழுங்கிய சமுத்திரத்தின் மேல்
ஓரிரண்டு துண்டுகளாவது மிதக்குமா?
தேடி முடிப்பதற்குள்
கண் விழித்துவிடுவோம்
அம்மா வரப்போகும்
அடுத்த வேளைக்கு ஏங்கியபடி
வையவன்
அம்மா எங்களைக் காண வரும்போதேல்லாம்
நாங்கள் பர்ஸ்ட் லைன்
பீச்சுக்குப் போவோம்
அப்போது மெரீனா தான்
செகண்ட் லைன் பீச்
பால்வெள்ளை மணலை இழந்து
இப்போது சிதிலமாகிவிட்ட
சென்னைக் கடற்கரையில் நின்று
வங்காள விரிகுடாவை
அம்மா வெகுநேரம் வெறித்துப் பார்ப்பாள்
உடனிருப்போம் நாங்கள் வாய்பேசாது
அவள் மௌனத்திற்கு மரியாதை தந்தபடி
முக்காடிட்டு மேகம் தரும்
முலைப்பாலைக் குடிக்காமல்
முந்தானை ஒதுக்கி
எட்டிப் பார்க்கும்
சுட்டிக் குழந்தை போல
நிலா தெரிவதைக் கண்டு
பெருமூச்சின்றி அவள் சொல்வாள்
'உங்கள் அப்பா உயிரோடிருந்தால்
பேசித் தீர்க்க எத்தனையோ நினைவுகள் !
நேரமே போதாது '
பிறகு உடனே
மறைந்து விடுவாள்
கனவைக் கலைத்துவிட்டு.
அப்பா போன் கப்பலை
விழுங்கிய சமுத்திரத்தின் மேல்
ஓரிரண்டு துண்டுகளாவது மிதக்குமா?
தேடி முடிப்பதற்குள்
கண் விழித்துவிடுவோம்
அம்மா வரப்போகும்
அடுத்த வேளைக்கு ஏங்கியபடி
வையவன்
No comments:
Post a Comment