திருவேற்காட்டிலிருந்து ஒரு தூது
திருப்பவளச் செவ்வாயின்
தித்திப்பைக் குறித்துத்
திருவேற்காட்டிலிருந்து ஒரு தூது
வந்து சொன்னது
அம்பாளா சொன்னாள்?
ஆமாம் என்றான் தூதன்
அவளுக்கெப்படித் தெரியும்?
'ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து
நாச்சியார் சொன்னாள்'
என் வாய் ஊறுகின்றது என்று
காதல் அமுதம் கண்ணில்
விஷமாகிக் கறுத்து நிற்க
மையல் துருத்துக்
கண்ணீ ராகச் சிந்த
ஆண்டாள் சொன்னாள்
போ ..வந்து பரிமாறிப்
பெற்றுக்கொள்ளச் சொல்
என் மனக்கசப்பை!
தூதாக வந்த திருமால்
நகைத்தார் குறும்பாக..
திருப்பவளச் செவ்வாயின்
தித்திப்பைக் குறித்துத்
திருவேற்காட்டிலிருந்து ஒரு தூது
வந்து சொன்னது
அம்பாளா சொன்னாள்?
ஆமாம் என்றான் தூதன்
அவளுக்கெப்படித் தெரியும்?
'ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து
நாச்சியார் சொன்னாள்'
என் வாய் ஊறுகின்றது என்று
காதல் அமுதம் கண்ணில்
விஷமாகிக் கறுத்து நிற்க
மையல் துருத்துக்
கண்ணீ ராகச் சிந்த
ஆண்டாள் சொன்னாள்
போ ..வந்து பரிமாறிப்
பெற்றுக்கொள்ளச் சொல்
என் மனக்கசப்பை!
தூதாக வந்த திருமால்
நகைத்தார் குறும்பாக..
No comments:
Post a Comment