ஒரு கிராமத்து வீட்டின் மழைக்காலம்
வானத்தை வெட்டிக்கிழிக்கின்ற
வெறியில் விளையாடிய மின்னல்கள்
அண்டத்தை உலுக்கி முகவரி கேட்ட இடியோசை
பட்டுப்பட்டென்று வெடித்த பல்புகள்
பற்றியெரிந்த ட்ரான்ஸ்பார்மர்
நிலம்நிலமென்று கட்டிக்காத்தது
போதுமென்று புறப்பட்டுப் போன
மகராசி பாடையின் பின்
வயிறு வலிக்கக் கத்திச்சென்ற
மகள் கண்ணெதிரில்
போன மகராசியின் ஒவ்வொரு கால்சுவடும்
கைப்பதமும் பதிந்து வடுப்பட்ட நிலத்தில்
கதறக்கதறப் பெய்து தீர்த்தது மழை
யாராரோ உழன்ற உளைச்சலாய்
எழுந்தது தவளைக் கூப்பாடு
போனவள் தவமிருந்தது இதற்கல்லவா?
வானத்தை வெட்டிக்கிழிக்கின்ற
வெறியில் விளையாடிய மின்னல்கள்
அண்டத்தை உலுக்கி முகவரி கேட்ட இடியோசை
பட்டுப்பட்டென்று வெடித்த பல்புகள்
பற்றியெரிந்த ட்ரான்ஸ்பார்மர்
நிலம்நிலமென்று கட்டிக்காத்தது
போதுமென்று புறப்பட்டுப் போன
மகராசி பாடையின் பின்
வயிறு வலிக்கக் கத்திச்சென்ற
மகள் கண்ணெதிரில்
போன மகராசியின் ஒவ்வொரு கால்சுவடும்
கைப்பதமும் பதிந்து வடுப்பட்ட நிலத்தில்
கதறக்கதறப் பெய்து தீர்த்தது மழை
யாராரோ உழன்ற உளைச்சலாய்
எழுந்தது தவளைக் கூப்பாடு
போனவள் தவமிருந்தது இதற்கல்லவா?
No comments:
Post a Comment