மற்றொரு நெல்மணி
ஒரு நெல்மணி நின்ற
கதிர் ஈர்க்கில் முளைத்தன
இரு நெல்மணிகள்
ஒரு கதிர் இரு கதிரானதால்
பூரிக்கிறார் பாடுபட்ட
உழவர்
அளக்க வரப்போகும்
கள்ள எடை
நியமன விலை
எடு கூலி
விற்பனை வரி
வாங்கிய கடன்
சுமக்கும் வட்டி
எல்லாமே அடிக்கப்போகும்
கொள்ளையை
மனப்பதராக தூ ற்றித்
தள்ளிவிட்டு
மாறி மாறி
வானையும் மண்ணையும்
பார்த்துப் பார்த்து
மின்னி எழுகிறது புன்னகை.
வந்த விளைச்சலால்
ஏதோ ஓர் மற்றொரு
வயிற்றிற்கு வழங்கிய
உத்தரவாதம்
பதர் போக்கிய மணியாக
மனசில் நிரம்புகிறது
எந்த விலைக்கு
நிகர் அந்தக்
கணநேரக் குதூகலம் ?
ஒரு நெல்மணி நின்ற
கதிர் ஈர்க்கில் முளைத்தன
இரு நெல்மணிகள்
ஒரு கதிர் இரு கதிரானதால்
பூரிக்கிறார் பாடுபட்ட
உழவர்
அளக்க வரப்போகும்
கள்ள எடை
நியமன விலை
எடு கூலி
விற்பனை வரி
வாங்கிய கடன்
சுமக்கும் வட்டி
எல்லாமே அடிக்கப்போகும்
கொள்ளையை
மனப்பதராக தூ ற்றித்
தள்ளிவிட்டு
மாறி மாறி
வானையும் மண்ணையும்
பார்த்துப் பார்த்து
மின்னி எழுகிறது புன்னகை.
வந்த விளைச்சலால்
ஏதோ ஓர் மற்றொரு
வயிற்றிற்கு வழங்கிய
உத்தரவாதம்
பதர் போக்கிய மணியாக
மனசில் நிரம்புகிறது
எந்த விலைக்கு
நிகர் அந்தக்
கணநேரக் குதூகலம் ?
No comments:
Post a Comment