நீ எவளாகவாவது
இருந்துவிட்டுப்போ
பாடு, ஆடு, நடி
நாட்டியமாடு,கையில்
அதிகாரக்கோல் பிடித்து
எங்கெங்கே உன்னால்
கட்டளை இட முடியுமோ
செய், நேர்வதற்குப்
பொறுப்பேற்றுக் கொள்;
பெண்ணுரிமைக்கொடி
பிடித்துக்கொண்டுத் தேவையானால்
போராடு.சிறைக்குப் போ.
கவலை இல்லை.
என் கூட்டில்
என் தீனித் தட்டில்
இரை வந்து சேர வேண்டும்
என் உடை வெளுப்பாக
மடிப்புக் கலையாமல்
இருந்துவிடவேண்டும்
எப்போது நான் அழைத்தாலும்
படுக்க வந்து சேர்.
நீயும் நானும் சேர்ந்து
பொரித்த குஞ்சுகளுக்கு
இரை முக்கியம். கவனம்.
உனக்கும் எனக்குமான
ஒப்பந்தமல்ல இது.
சமுதாய ஒப்பந்தம்..
விலங்கென்று கருதினால்
தறித்துக்கொண்டு வெளியேறு
சுருக்கமாக நீ பெண்.
நான் ஆண்.
மீட்சியே இல்லை.
-வையவன்
இருந்துவிட்டுப்போ
பாடு, ஆடு, நடி
நாட்டியமாடு,கையில்
அதிகாரக்கோல் பிடித்து
எங்கெங்கே உன்னால்
கட்டளை இட முடியுமோ
செய், நேர்வதற்குப்
பொறுப்பேற்றுக் கொள்;
பெண்ணுரிமைக்கொடி
பிடித்துக்கொண்டுத் தேவையானால்
போராடு.சிறைக்குப் போ.
கவலை இல்லை.
என் கூட்டில்
என் தீனித் தட்டில்
இரை வந்து சேர வேண்டும்
என் உடை வெளுப்பாக
மடிப்புக் கலையாமல்
இருந்துவிடவேண்டும்
எப்போது நான் அழைத்தாலும்
படுக்க வந்து சேர்.
நீயும் நானும் சேர்ந்து
பொரித்த குஞ்சுகளுக்கு
இரை முக்கியம். கவனம்.
உனக்கும் எனக்குமான
ஒப்பந்தமல்ல இது.
சமுதாய ஒப்பந்தம்..
விலங்கென்று கருதினால்
தறித்துக்கொண்டு வெளியேறு
சுருக்கமாக நீ பெண்.
நான் ஆண்.
மீட்சியே இல்லை.
-வையவன்
No comments:
Post a Comment