Monday, July 23, 2012

விடுதலை விரும்பி

(தேதி குறிக்கப்பட்ட வனம் - கவிதைத்தொகுதியில் இருந்து  ) 

விடுதலை விரும்பி 

குயிலே 
உனக்கனந்த கோடி 
நமஸ்காரம் 
குமரன் வரக் கூவுவாய் 
என்றொரு பழைய பாட்டு 

முருகன் தந்த 
முத்தச் சுவையின் 
எச்சக் கிறுகிறுப்பில் 
எந்த வள்ளியோ 
இன்னும் வெதும்புகிறாள் 

நானும்  தத்தளிக்கிறேன் 
எவள் எவளோ 
அப்போதைக் கப்போது 
நான் ஆணென்று நினைவூட்டி 
என்னை அலைக்கழிக்கும் 
மனக் கிறுக்கில் 

குமரா குமரா வந்துவிடு 
குயிலே குயிலே   கூவிவிடு 
எனக்கும் விடுதலை தந்துவிடு 
வையவன் 

No comments: