கோடானு கோடிப் பட்டுப்பூச்சிகள்
'மாண்டு மடிந்து
நூலாகிச் சேலையாகிக்
கிழிந்து நைந்து
பிரிந்துத் தும்பு தூசாகிப்
போய் விட்ட
கோடானு கோடிப் பட்டுப்பூச்சிகளில்
ஒன்றே ஒன்றுக்குக்கூட
எதிர்த்து ஏன் எங்களைக்
கொல்கிறீர்கள் என்று
கேட்கிற வாயில்லையா?
எதிர்க்கத் துணிவில்லையா?'
.'...த்சு..த்சு.. த்சு..நிறுத்து.
நிறுத்து.. நிறுத்து
என்ன சொல்லவருகிறாய் நீ?
ஏன் சொல்ல வருகிறாய்?
பெண்ணின் பட்டுப்புடைவை
மயக்கத்தை மூலதனமாக்கி
வியாபாரமாக்கிச் சமூகச் சந்தையின்
விற்பனைப் பொருள்களில்
முக்கிய ஐட்டமாக
அவளை நைஸ் செய்து
சுரண்ட நிறுத்திவைத்திருக்கிறோம்!
பட்டுப்பூச்சிகளுக்கு
வக்காலத்து வாங்கி
அஹிம்சா பரமோதர்மாவென
தர்மோபதேசம் செய்ய வருகிறாயா?
போ,போய்ச் செய் உன் மனைவியிடம்
அல்லது காதலியிடம்.
-வையவன்
'மாண்டு மடிந்து
நூலாகிச் சேலையாகிக்
கிழிந்து நைந்து
பிரிந்துத் தும்பு தூசாகிப்
போய் விட்ட
கோடானு கோடிப் பட்டுப்பூச்சிகளில்
ஒன்றே ஒன்றுக்குக்கூட
எதிர்த்து ஏன் எங்களைக்
கொல்கிறீர்கள் என்று
கேட்கிற வாயில்லையா?
எதிர்க்கத் துணிவில்லையா?'
.'...த்சு..த்சு.. த்சு..நிறுத்து.
நிறுத்து.. நிறுத்து
என்ன சொல்லவருகிறாய் நீ?
ஏன் சொல்ல வருகிறாய்?
பெண்ணின் பட்டுப்புடைவை
மயக்கத்தை மூலதனமாக்கி
வியாபாரமாக்கிச் சமூகச் சந்தையின்
விற்பனைப் பொருள்களில்
முக்கிய ஐட்டமாக
அவளை நைஸ் செய்து
சுரண்ட நிறுத்திவைத்திருக்கிறோம்!
பட்டுப்பூச்சிகளுக்கு
வக்காலத்து வாங்கி
அஹிம்சா பரமோதர்மாவென
தர்மோபதேசம் செய்ய வருகிறாயா?
போ,போய்ச் செய் உன் மனைவியிடம்
அல்லது காதலியிடம்.
-வையவன்
No comments:
Post a Comment